Thursday, 24 August 2017

முகநூலின் ஆசிரியரைப்பற்றி...

இந்த முகநூலின் ஆசிரியர் அருட்பணி. ஞானதாஸ், கோட்டாறு மறைமாவட்டம் சரல் பங்கைச்சார்ந்தவர். தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை தூய ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப்படிப்பை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்து, கல்லூரி படிப்பை பயோனியர் குமாரசாமி கல்லூரியிலும் முடித்தவர். குருத்துவ, தத்துவ இயல் மற்றும் இறையியல் படிப்பை மங்களூர், தூய ஜோசப் குருத்துவக்கல்லூரில் முடித்து 19-4-2019 அன்று கோட்டாறு கேட்ட வரம் தரும், தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அருட்பணியாளராக அருள்பொழிவுப் பெற்றவர். கடியப்பட்டணம் மற்றும் கார்மல்நகர் பங்குகளில் இணைப்பங்குப்பணியாளராக பணியாற்றியப்பின் கப்பியறைப்பங்கு பங்குத்தந்தையாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். கப்பியறைப்பங்கு பணியாளராக பணியாற்றிய காலத்தில். நாஞ்சில் பால் நிறுவனத்தின் பொருளராகவும், முளகுமூடு மறைவட்ட மறைக்கல்வி இயக்குநராகவும், முளகுமூடு மண்டல அன்பிய இயக்குநராகவும் பணியாற்றியவர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், உயர்படிப்பிற்காக ரோமைக்கு அனுப்பப்பட்டு, ரோமையிலுள்ள திருத்தந்தையின், தூய சிலுவை பல்கலைக்கழகத்தில் 'திருச்சபையில் ஊடகங்கள் (தொலைத்தொடர்பு சாதனங்கள்)' என்ற பிரிவில் மூன்றாம் ஆண்டு பட்ட மேற்படிப்பை தொடர்கிறார்...