Sunday, 26 November 2017

Church promotes its faithful to take up civil leadership

For the greater glory of God, Church promotes its faithful to take up civil leadership
Many Politicians blame the Church for interfering politics. The relationship between Church and politics or Church’s interference in the politics is always a matter of discussion. Most of the time, involvement of the Church is often misunderstood.

On 26-01-2017, United States Conference of Catholic Bishops released a statement stating President Trump’s orders. My Trump ordered to construct a wall at United States/ Mexico border. Earlier, Pope Francis said, at his general audience, societies should build bridges not walls to encourage good relations among people. On 18-2-2016, Pope Francis said that any one who wants to build a border wall is not a Christian. Trump reacted saying, “for a religious leader to question a person’s faith is disgraceful.” This is one of the examples where Church and the state underwent a conflict.
In this article, Church means the people of God and the state is constituted of the people. Every citizen has a right to express his/her opinions and he/she has the right to involve in politics. Therefore, the church has the right to guide its faithful towards better governance.
There are people who are against of guidance of Church. They hold that state and its politics are based on natural laws and secular ethics; whereas, Church is based on divine laws and faith. Quoting John 15:19, they say, followers of Jesus should not be the part of the world. In John 18:36, Jesus says, “My kingdom is not of this world: if my kingdom was of this world, my disciples would have made a good fight to keep me out of the hands of the Jews: but my kingdom is not here.”
Therefore, the purpose of the separation of church and state was to safeguard that individuals could practice their spiritual or religious beliefs without fear of revenge.
The Church sanctifies the politics. Jesus said that we are the salt and light in the world. We are called to sanctify the politics. In England, William Wilberforce abolished slavery because of his strong Christian conviction. In Bible proverbs 11:14 states, “When there is no helping suggestion the people will have a fall, but with a number of wise guides they will be safe.”
It is the freedom of each citizen to express his/her opinions. He/she has the right to involve in politics. The church guides the Christians faithful to follow the footsteps of Christ, like helping the poor, doing justice to all.
The church has also a moral obligation to be the voice of the voiceless. Looking back to the history, Archbishop Oscar Romero and many Jesuit priests involved in politics, to raise the voice of the voiceless. 

Pastor Martin Niemöller opposed the nazification of German Protestant Churches. During the World War II, Pope Pius XII spoke against the Nazi’s euthanasia program. As a result, many politicians fought against Nazi’s euthanasia.
The word of God says that God is the creator of life and no one has the right to destroy it. When a government goes against word of God, Church has to interfere.
When the civil law goes against divine law, The Bible says to disobey the civil law and civil disobedience.
In Europe, there are a lot of Priests and religious. There are a lot of Catholics. In some occasions, the local civil authorities or higher civil authorities do not do the will of the people, Church or priests have to speak out the decisions of the faithful. Or the local Church should support the faithful for a just reasons.

When we pray the prayer “Our Father”, we say “thy kingdom come, thy will be done, on earth as it is in heaven.” To bring God’s kingdom on earth, Church should interfere into the politics.
Therefore, the church can interfere in the themes of politics to raise the voice of the voiceless. Church also guides the politicians to work for the betterment of the society. At the same time, the leaders of the Church, should not misuse the pulpit to favor one political party.


Friday, 10 November 2017

Church and Holy Eucharist...

Church is more promoting rather than discriminating the faithful to receive the Holy Eucharist

Jesus Christ instituted the sacrament of Holy Eucharist on the Holy Thursday. He instituted it with the intention of being with the people throughout the ages. Therefore, we celebrate the Holy Eucharist as the commemoration of the last supper. At the same time, the code of canon law (c.915) states that Catholics are not to be allowed to receive Holy Communion if they are in grave sin. Therefore, can we conclude that forbidding the Eucharist to some is a discriminatory gesture!
          We know that Jesus instituted the Eucharist to remember his death and resurrection for the forgiveness of our sins. The Church encourages its faithful to receive the Eucharist frequently. At the same time, the Church guides its faithful to hold the blessed Eucharist in the highest honor. Because Jesus said, “this is my body and this is my blood.”


When the bread and wine is consecrated at the mass, the bread becomes body of Christ and wine becomes blood of Christ. Therefore, Church sets out specific guidelines regarding how the faithful should prepare themselves to receive the Lord’s body and blood.
The faithful should receive the sacrament with great devotion (C.898). Catechism of the Catholic Church teaches (1385) “anyone conscious of a grave sin must receive the sacrament of reconciliation before coming to the Eucharist.”
Jesus is merciful and forgiving; at the same time, we should make ourselves worthy to receive his mercy. Jesus said to the adulterous woman, “woman, yours sins are forgiven, do not sin any more.” The Church, the bride of Christ is concerned with three interrelated points:
1.     Personal and spiritual well being of a Catholic: It is a part of formation to promote a person spiritually with deep faith in Jesus and practice his teachings. It transforms a person more dedicated to the paths of Jesus Christ.
2.     The need to maintain reverence toward the most Holy Eucharist: The Eucharist is the very channel of eternal life. To receive the Eucharist in a worthy manner, a person must receive sacrament of confession through perfect contrition.
3.     The need to avoid public scandal.
But question remains: for example, one catholic spouse is divorces by the other spouse, without the will of first. Can he/she receive Eucharist? The spouse is the innocent victim of a divorce, decreed by civil law of other spouse. This spouse therefore has not contravened the moral law. We have to make it clear distinction that there is a reasonable difference between a spouse who has sincerely tried to be faithful to the sacrament of marriage and on the contrary, one who through his own grave fault destroys a canonically valid marriage (CCC 2386). Such person can’t be excluded from the sacraments simply because their spouse chose to divorce him/her.


There are also other situations; like a battered wife who seeks to protect her children from an abusive situation; or if one spouse is bankrupting the family with compulsive gambling, the other spouse obtains a civil divorce in order to safeguard the financial well-being of the rest of the family; but both the cases, they are not married again.
When we take these particular cases, the church does not teach that Catholics are forbidden to receive Holy Communion if they are divorced. But, it teaches that a Catholic who has been divorces and remarried, without having first obtained an annulment of the first marriage, is not permitted to receive the Eucharist.
The Catholic Church holds, in fidelity to the words of Jesus Christ, “whoever divorces his wife and marries another, commits adultery against her; and if she divorces her husband and marries another, she commits adultery.” If the divorces are remarried civilly, they cannot receive Eucharistic communion as long as this situation persists (1650).

If a divorced and remarried Catholic wishes to receive Holy Communion, what can he do? Church condemns the reception of the Eucharist by a Catholic who persists in an adulterous union. He/ She must first repent of his adultery, and receive sacramental absolution. But in order to be truly sorry for his sins, a Catholic must have the resolution to avoid them in future. Thus the adultery has to end.
If the civilly remarried catholic repented and lives as brother and sister (not as husband and wife) for the well-being of minor children, it may lead to public scandal. In this situation, the parish priest, in consolation with the bishop and the spouses, can make an effort to ensure that these parishioners can receive the Eucharist in a more discreet way.
Most of the time, the Catholic Church tries her best to balance different situations and takes a decision on these background: reverence toward the most Blessed Sacrament, respecting the right of Catholics and avoiding public scandals.

We can finally conclude that Church is a mother who always concerns towards its children. As a mother, it promotes its children to receive the sacrament of Eucharist. At the same time, as a mother, it also guides its children to receive sacrament of divine gift in a worthy manner. The mother knows what is the best for each child: an adult or a child; handicapped or healthy; prodigal or obedient child. 

Monday, 23 October 2017

தீப ஒளித்திருநாள்

தீப ஒளித்திருநாள்

வத்திக்கான் வானொலி நேகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொட்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும். தீபாவளி என்ற சொல்லை தீப, ஆவளி என்று பிரித்து பொருள் கொள்வர். தீபம் என்றால் ஒளிவிளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் அகற்றி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி என்பர். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள்தருவதாய் ஐதீகம். இவ்விழா அடிப்படையில் இந்துப்பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் விழா. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளுண்டு.

            இரமான் 14 வருட வனவாசம் முடித்து நாடு திரும்பும்போது மக்கள் விளக்கேற்றி வரவேற்ற நிகழ்வை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள் எனவும், மக்களை கொடுமைப் படுத்திக்கொண்டிருந்த நரகாசுரன் என்ற அரக்கனை, கிருஷணன் கொன்ற நாளை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறார்கள் எனவும், ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்ற நாள் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராண கதைகள் சொல்கின்றன.  மேலும் இவ்விழா இந்து ஆண்டின் தொடக்கத்தில் வருவதால், ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழ, செல்வத்தின் கடவுளாகிய சரஸ்வதியை வேண்டும் திருநாள் எனவும் குறிப்பிடுவர்.  தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ  கொளுத்துவது, புத்தாடைகள் உடுத்துவது, பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள் உண்பது  மற்றும் மற்றவர்களோடு பரிமாறுவது, மற்றும் நல்ல அறுசுவை சைவ உணவு உண்பது இவ்விழாவின் சிறப்பு.

    கத்தோலிக்க திருச்சபை இவ்விழாவை ஒளியின் விழாவாக கொண்டாடுகிறது. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று, இருள் பரவியிருந்தது. அப்போது, 'கடவுள், ஒளி தோன்றுக' என்றார். ஒளி தோன்றிற்று' என்று தொடக்கநூல் முதல் அதிகார முதல் மூன்று வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்விழா உலகிற்கு ஒளியேற்றிய தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்ற ஒருவிழாவாக அமைகிறது.
தூய யோவான் தனது முதல் திருமுகத்திலே (1 யோவான் 1:5-7) கூறுவார் 'கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்துகொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; மாறாக அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்' என குறிப்பிடும் தூய யோவான் நமது வாழ்வு ஒளியில் நடக்க ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று, தீபாவளி வாழ்த்து செய்தியாக வத்திக்கான் வெளியிட்டச் செய்தியில், கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் பன்மைத்தன்மையை, உண்மையாகவே மதித்து போற்றுவதன் வழியாக, ஒற்றுமையும் நலமும் நிறைந்த ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது. எனவே இவ்விழா நட்புறவையும், ஒற்றுமையையும் எற்படுத்தும் விழாவாக அமைய தாய்திருச்சபை நம்மை அழைக்கிறது.

ஒளியின் விழாவைக் கொண்டாடும் இந்நாளிலே, ஒளியாம் இறைவனை உலகிற்கு கொடுக்க, நாம் அழைக்கப்பட்டுள்ளோம். யோவான் நற்செய்தி 8:12-13-ல் இறைமகன் இயேசு கூறுவார், 'உலகின் ஒளி நானே: என்னைப்பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.'
ஒளியின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், எவ்வாறு ஒளியானது இருளகற்றி, வாழ்வுக்கு வழிகாட்டுகின்றதோ, அதேப்போன்று நாமும் இயேசுவின் ஒளியில், வழியில் அவரை பின்தொடர அழைக்கப்பட்டிருக்கிறோம். இதனையே மிக அழகாக, அருமையாக தூய பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (5:8) குறிப்பிடும்போது சொல்வார்; ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளிபெற்ற மக்களாக வாழுங்கள். மேலும் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிப்பிடும்போது (உரோமையர் 13:12) இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக என்று பலுலடியார் அறிவுறுத்துவார். ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களைப்பற்றி குறிப்பிடும் போது மத்தேயு 5:16 -ல் இயேசு குறிப்பிடுவார், உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். நமது செயல்கள் நற்செயல்களாக, சமூகத்திற்கு நன்மை விளைவிப்பதாக இருந்தால், மக்கள் நம்மை படைத்த, இறைவனைப் போற்றி புகழ்வார்கள். நமது நற்செயல்கள் இன்றைய சமூக சூழ்நிலையில் எத்தகையதாக உள்ளது?
ஒருசில நாள்களுக்கு முன்னால் திபாவளியை மையப்படுத்தி ஒரு குறும்படம் Facebook-ல் வெளிவந்தது என்னை சிந்திக்க வைத்தது. ஒரு நடுத்தர குடும்பம். குடும்பத்தலைவர், குடும்பதலைவி மற்றும் அவர்களுக்கு ஒரு குழந்தை. குடும்ப தலைவர் ஒரு சிறிய துணிகடை வைத்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார். திபாவளி காலகட்டத்தில் அதிக வியாபாரம் நடக்கும், திபாவளியை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று நினைத்தார். ஆனால் பெரிய, பெரிய மால்களிலும், பெரிய அடுக்குமாடி ஜவுளி கடைகளிலும் துணி எடுக்கின்ற பழக்கம் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் அதிகரித்துள்ளதால், இச்சிறிய துணிகடையில் வியாபாரமில்லை. கடன்வாங்கி திபாவளி பண்டிகையை கொண்டடவும் துணிவில்லை. ஆசையாக வளர்த்த தனது மகனுக்கு பட்டாசுகள் வாங்கிக்கொடுக்கவோ, சுவையான பலகாரங்களை சமைக்கவோ, திபாவளி நாளில் சுவையான உணவை உண்ணவோ வழியில்லாமல் குடும்பம் தவிக்கிறது. குடும்ப தலைவர் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்படுகிறார். இதனை கவனித்துக்கொண்டிருந்த, வேலைக்கு செல்கின்ற ஒரு சகோதரி இக்குடும்பம் திபாவளி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட ஒருசில சேலைகளை விலைக்கு வாங்குகிறார். குடும்ப தலைவரின மனதில் மிகப்பெரிய ஆனந்தம், மகிழ்ச்சி.
ஒரு சகோதரி இன்னொரு குடும்பத்தின் மீது அக்கரைக்கொண்டு அவர்களும் தீபாவளி விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காய் சிறு தியாகம் செய்கிறார். இன்னொரு குடும்பமும் மகிழ்ச்சியாக திபாவளியை கொண்டாடுகிறது.  இக்குறும்படம் இன்றைய நடுத்தர குடும்பங்களின், சிறுவிவசாகிகளின், சிறுவியாபாரிகளின், கைத்தறி நெசவாளர்களின் பொருளாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது.  நம்முடைய சமூகத்தில் அதிகமாக வாழுகின்ற இந்த ஏழைவிவசாகிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களை செய்பவர்களுக்கு நம்முடைய நற்செயல்கள் வழியாக  இறையொழியை ஊட்ட அழைக்கப்பட்டுள்ளோம்.

அதேநேரத்தில் யோவான் 3:19-ல் குறிப்பிடுவது போல, ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால், மனிதர் ஒளியைவிட இருளையை விரும்பினர். பல நேரங்களில் நடுத்தர ஏழை குடும்பங்களும் திபாவளி பண்டிகையைக் கொண்டாட பெரிய பெரிய மால்களிலும், பெரிய பெரிய ஜவுளி கடைகளுக்கும், Supermarket-க்கும் செல்வதால், சிறுவியாபாரிகள், விவசாகிகள் நெசவாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இது உழைக்கின்ற பல மனிதர்களை, பல குடும்பங்களை பாதிக்கிறது.
ஒருமாதத்திற்கு முன்னால் சமூக வலைதளத்தில் வெளிவந்த மற்றொரு செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு புகைப்படம்.  வயது முதிர்ந்தவர் பனைக்கிழங்குகளையும், காய்கறிகளையும் விற்றுக் கொண்டிப்பதுப்போன்ற புகைப்படம். அப்புகைப்படத்தில் எழுதப்பட்டிருந்தது. இத்தகையோரிடம் விலைபேசாதீர்கள். ஏனெனில், இவர் இந்த சிறிய வருமானத்தில் தான் வாழ்கிறார் என்று.
திபஒளி மாலை நேரத்திலே அழகிற்கும், இருளை அகற்றுவதற்கும் மட்டுமல்லாமல், நமது அயலானின் வாழ்வில் ஒளியை ஏற்ற நாம் உதவ வேண்டும் என்பது இப்புகைப்படம் தரும் செய்தி. தூய யோவான் 12:46 கூறுவதுபோல, இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் இருளில் இராதபடி நாம் ஒளியாக உலகிற்கு செல்ல அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மீனவர் பிரச்சினைகள், மற்றும் மீத்தேன் திட்டத்தால் அதிகரித்துவரும் விவசாய பிரச்சனைகள், பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறை பிரச்சனைகள், சாதி மற்றும் ஆணவ படுகொலைகள், தனியார் மயமாக்கும் கல்விக்கொள்கையால் அதிகரித்துவரும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள், அடிப்படை கல்வியின்மை, வேலைவாய்பின்மை, மதுபான கடைகளால், மதுநோயினால் அதிகரிக்கும் தந்தையில்லா குடும்பங்கள் மற்றும் தந்தையிருந்தும் பயனற்ற குழந்தைகள்.
இந்த நாட்களில் பட்டாசுகளால் அதிகமாக ஏற்படுகின்ற காற்று மற்றும் சுகாதார மாசுபாடு. கழிந்த ஆண்டு, இந்த நாள்களில், டெல்லி போன்ற நகரங்களில் மனிதன் சுவாசிக்க ஏற்ற காற்றை விட 10 மடங்கு காற்று மாசுபட்டுள்ளது என உலக சுகாதார அறிக்கைக் கூறிப்பிடுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் உலகிற்கு ஒளியாய் ஒளிர இறைவன் நம்மை அழைக்கிறார். திபாவளியன்று, மாலையில் தீபங்களை ஏற்றும்போது, நமது மனதில் ஒளியேற்றுவோம். நமது வாழ்வு, முதலாவதாக, நமது குடும்பத்திற்கு ஒளியாக, இருளை அகற்ற உதவும் எனவும், இரண்டாவதாக நமது முயற்சிகள், வழிகாட்டுதல்கள் சமூகத்தின் இருளை அகற்ற உதவும் என உறுதி எடுப்போம். திபாவளி திருநாள் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்று, இருளை ஒளி வெற்றிக்கொண்ட இந்நாளில் திபாவளி விழாவை கொண்டாடும் அனைத்து சமய சகோதர, சகோதரிகளும் எல்லா வழங்களும் பெற்றுவாழ வத்திக்கான் வானொலி சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Friday, 29 September 2017

Be Brave, Be Prayerful, take risk, fly higher and higher

Be Brave, Be Prayerful, take risk, fly higher and higher

The experience in Relevant Radio

        Relevant Radio is a Catholic radio in the United States. It broadcasts and promotes religious programs based on gospel and Catholic teaching. Relevant radio assists the Catholic Church in the New Evangelization by bridging the gap between faith and everyday life. It believes that media has the power to deliver this message of hope to the world.

          As an intern, I worked in Relevant Radio for four weeks in September 2017. After merging with Immaculate Heart Radio, Relevant Radio has around 62 owned radio stations and 62 affiliate radio stations. In Green Bay, it has two major studies and a few editing studios. It also has studios in other cities.




       The Relevant Radio not only talks its principles on air, but also it teaches its principles to follow by its staffs. The staffs are trained with catholic teaching and they are practicing Catholics. It has its own guiding principles to bridge the gap between the faith and everyday life. Some of the guiding principles that help to bridge the gap between the faith and everyday life are: to be faithful to the Magisterium and Catechism of the Catholic Church and to be united with the teachings of Bishops and the Pope. The management and its staffs have great devotion to Blessed Virgin Mary and they keep their evangelization work under the protective intercession of the Blessed Virgin Mary.

        The live programs like ‘The Drew Mariani Show’, ‘Father Simon Says’, ‘The Inner life’, ‘Go ask your Father’ and other programs help the people to relate the faith with the everyday life. A few times, I was with the team of ‘The Drew Mariani Show’. The host and producers try their best to put catholic faith into everyday life. For this, every day, they try to find topics which are relevant to this particular situation and the problems which affect everyday life.


       The prayer lines of Relevant Radio help the listeners to request to their prayer needs. Staffs, who attend the phone calls, relate with the callers, give moral support in their sufferings through their consoling words and prayers. Later, the intentions of the callers are prayed at the chapel of the Nativity and Carmelite Monastery. Some of the important intentions are taken at 3 p.m. at the chaplet of Divine Mercy on week days.

        Facebook live program is one of the important social media program. It helps to broadcast the Holy Mass lively. It helps thousands of views to see Holy Mass lively every day and thousands of others see it as recorded mass. During the Holy Mass live, hundreds of prayer requests are raised by the viewers to pray for different needs.

Relevant web-site helps thousands of internet views to listen to programs all over the world. It has live Radio, recorded programs and many other religious articles and prayers.

         Mobile App is a new innovation in the social media world and it attracts many youth to practice the Catholic faith. This mobile App helps the readers and listeners to read and to listen to everyday prayers and most of the important Catholic prayers. One can also listen to the Relevant Radio lively and one can search and find previously recorded programs. 

        Fr Rochy, the Executive Director, Relevant Radio Senior Management, Board of Directors and Episcopal Advisory Council work hand in hand in this new Evangelizative progress. Throughout these years, their hard work is seen by increasing number of stations, increasing numbers of live programs and merging Relevant Radio with Immaculate Heart Radio, while Relevant Radio continued as  the one-air branding. 

Hands up to Fr Rochy and its members.

          

Thursday, 28 September 2017

ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி: திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கானின் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளாலும் சுற்றுலாப் பயணிகளாலும் நிரம்பி வழிந்தது. கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக இருப்பவைகள் குறித்து கவனமாகச் செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தார். 


மறைக்கல்வியுரை : ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி

விடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

செப்.,28,2017. ஏமன் நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு 18 மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட சலேசிய துறவுசபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் இவ்வியாழனன்று இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்.


சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

Wednesday, 27 September 2017

முகநூலின் ஆசிரியரைப்பற்றி...


முகநூலின் ஆசிரியரைப்பற்றி...

இந்த முகநூலின் ஆசிரியர் அருட்பணி. ஞானதாஸ், கோட்டாறு மறைமாவட்டம் சரல் பங்கைச் சார்ந்தவர். தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை தூய ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப்படிப்பை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்து, கல்லூரி படிப்பை பயோனியர் குமாரசாமி கல்லூரியிலும் முடித்தவர். 

குருத்துவ, தத்துவ இயல் மற்றும் இறையியல் படிப்பை மங்களூர், தூய ஜோசப் குருத்துவக்கல்லூரில் முடித்து 19-4-2019 அன்று கோட்டாறு கேட்ட வரம் தரும், தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அருட்பணியாளராக அருள்பொழிவுப் பெற்றவர். 

கடியப்பட்டணம் மற்றும் கார்மல்நகர் பங்குகளில் இணைப்பங்குப்பணியாளராக பணியாற்றியப்பின் கப்பியறைப்பங்கு பங்குத்தந்தையாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். கப்பியறைப்பங்கு பணியாளராக பணியாற்றிய காலத்தில். நாஞ்சில் பால் நிறுவனத்தின் பொருளராகவும், முளகுமூடு மறைவட்ட மறைக்கல்வி இயக்குநராகவும், முளகுமூடு மண்டல அன்பிய இயக்குநராகவும் பணியாற்றியவர். 

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், உயர்படிப்பிற்காக ரோமைக்கு அனுப்பப்பட்டு, ரோமையிலுள்ள திருத்தந்தையின், தூய சிலுவை பல்கலைக்கழகத்தில் 'திருச்சபையில் ஊடகங்கள் (தொலைத்தொடர்பு சாதனங்கள்)' என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, தற்போது ஆஞ்சலிகும் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை தொடர்கிறார்.



Tuesday, 26 September 2017

Gospel today 27-09-2017 in Tamil

இன்றைய இறைவார்த்தை
நற்செய்தி வாசகம்  27-09-2017

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இன்றையா நற்செய்தி: 26-9-2017

இன்றையா நற்செய்தி: 26-9-2017
லூக்கா 8:19-21 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.

Thursday, 24 August 2017

முகநூலின் ஆசிரியரைப்பற்றி...

இந்த முகநூலின் ஆசிரியர் அருட்பணி. ஞானதாஸ், கோட்டாறு மறைமாவட்டம் சரல் பங்கைச்சார்ந்தவர். தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை தூய ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப்படிப்பை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்து, கல்லூரி படிப்பை பயோனியர் குமாரசாமி கல்லூரியிலும் முடித்தவர். குருத்துவ, தத்துவ இயல் மற்றும் இறையியல் படிப்பை மங்களூர், தூய ஜோசப் குருத்துவக்கல்லூரில் முடித்து 19-4-2019 அன்று கோட்டாறு கேட்ட வரம் தரும், தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அருட்பணியாளராக அருள்பொழிவுப் பெற்றவர். கடியப்பட்டணம் மற்றும் கார்மல்நகர் பங்குகளில் இணைப்பங்குப்பணியாளராக பணியாற்றியப்பின் கப்பியறைப்பங்கு பங்குத்தந்தையாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். கப்பியறைப்பங்கு பணியாளராக பணியாற்றிய காலத்தில். நாஞ்சில் பால் நிறுவனத்தின் பொருளராகவும், முளகுமூடு மறைவட்ட மறைக்கல்வி இயக்குநராகவும், முளகுமூடு மண்டல அன்பிய இயக்குநராகவும் பணியாற்றியவர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், உயர்படிப்பிற்காக ரோமைக்கு அனுப்பப்பட்டு, ரோமையிலுள்ள திருத்தந்தையின், தூய சிலுவை பல்கலைக்கழகத்தில் 'திருச்சபையில் ஊடகங்கள் (தொலைத்தொடர்பு சாதனங்கள்)' என்ற பிரிவில் மூன்றாம் ஆண்டு பட்ட மேற்படிப்பை தொடர்கிறார்...

Sunday, 11 June 2017

In the Mind of Christ...கிறிஸ்துவின் மனநிலையில்...

இறைவன் மீண்டுமொரு நல்லாயனை 
கோட்டாறு தலத்திருச்சபைக்கு வழங்கினார்...

20-5-2017 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருட்பணி. நசரேன் சூசை அவர்களை கோட்டாறு மறைமாவட்ட புதிய ஆயராக நியமித்தார்கள்.

20-5-2017 அன்று, கோட்டாறு மறைமாவட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய நன்னாள். கோட்டாறு மறைமாவட்ட முதன்மைகளை மனதில் கொண்டு, இறைவன் அருட்பணி. நசரேன் சூசை அவர்களை புதிய ஆயராக நமக்கு தந்துள்ளார்.


அருட்பணி. நசரேன் சூசை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பங்கைச் சார்ந்தவர்கள். தனது குருத்துவப் படிப்பை தூய அலோசியஸ் குருமடத்தில் தொடங்கி, மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை சென்னையிலுள்ள திருஇருதயக் குருமடத்தில் முடித்து, 02-04-1989 அன்று தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து அருட்பணியாளராக திருபொழிவு செய்யப்பட்டார்கள்.

இணைப் பங்குத்தந்தையாக குளச்சலிலும், பங்குத்தந்தையாக இனையம் மற்றும் கன்னியாகுமரியிலும் பணியாற்றிய புதிய ஆயர் அவர்கள், மறைமாவட்ட அழைத்தல் பணிக்குழுவின் செயலராகவும், மறைவட்ட முதன்மைப் பணியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.

புதிய ஆயர் நசரேன் சூசை அவர்கள் தனது இறையியல் மேல்படிப்பை பெல்ஜியத்திலுள்ள லுவைன் கல்லூரியிலும், முனைவர் படிப்பை ரோமையிலுள்ள கிரகோரியன் திருத்தந்தையின் பல்கலைக்கழகத்திலும் முடித்து, திருஇருதயக் குருமடத்தில் எட்டு ஆண்டுகள் இறையியல் பேராசிரியராகவும், இறையியல் பிரிவு கல்வி தலைவராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.

குருமாணவர்களுக்கு வழிகாட்டியாக, அருட்பணியாளருக்கு நண்பனாக, இறைமக்களுக்கு பங்குத்தந்தையாக, பணிக்குழுக்களின் பக்கபலமாக 28 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம், கோட்டாறு மறைமாவட்டத்தை வளப்படுத்தும் என நம்புகிறேன். பணி சிறக்க வாழ்த்துகிறேன். நல்ல உடல் உள்ள நலத்தை இறைவன் தர வேண்டுகிறேன்.



பத்து ஆண்டுகள் கோட்டாறு தலத்திருச்சபையை சீரும்  சிறப்புமாக வழிநடத்திய எம் பாசமிகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் தொடர்ந்து நல்ல உடல், உள்ள நலனைக் கொடுத்து வழிநடத்த வேண்டுகிறேன்.





 29-06-2017 அன்று, புதிய ஆயர் நசரேன் சூசை  அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு மற்றும் மறைமாவட்ட பொறுப்பேற்பு விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அருட்பணி. ஞானதாஸ்.