Sunday, 4 June 2017

அருட்கொடை இயக்கத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழா

ரோமை, 3-6-2017
உலக அளவிலான தூய ஆவியின் அருட்கொடை இயக்கத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழா, இன்று ரோமை நகரிலுள்ள் சிர்கோ மாக்சிமோ என்கிற திறந்த அரங்கில் வைத்து இன்று மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை நடைபெற்றது. திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்க, கர்தினால்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த 50,000 அருட்கொடை இயக்க உறுப்பினர்கள் மற்றும் வழிகாட்டிகள் பங்கேற்க இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு, முடிவுற்றது. ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியன் மொழிகளில் அருட்கொடை இயக்கப்பாடல்கள் பாடப்பட்டு, பங்கேற்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

No comments:

Post a Comment