Friday, 29 September 2017

Be Brave, Be Prayerful, take risk, fly higher and higher

Be Brave, Be Prayerful, take risk, fly higher and higher

The experience in Relevant Radio

        Relevant Radio is a Catholic radio in the United States. It broadcasts and promotes religious programs based on gospel and Catholic teaching. Relevant radio assists the Catholic Church in the New Evangelization by bridging the gap between faith and everyday life. It believes that media has the power to deliver this message of hope to the world.

          As an intern, I worked in Relevant Radio for four weeks in September 2017. After merging with Immaculate Heart Radio, Relevant Radio has around 62 owned radio stations and 62 affiliate radio stations. In Green Bay, it has two major studies and a few editing studios. It also has studios in other cities.




       The Relevant Radio not only talks its principles on air, but also it teaches its principles to follow by its staffs. The staffs are trained with catholic teaching and they are practicing Catholics. It has its own guiding principles to bridge the gap between the faith and everyday life. Some of the guiding principles that help to bridge the gap between the faith and everyday life are: to be faithful to the Magisterium and Catechism of the Catholic Church and to be united with the teachings of Bishops and the Pope. The management and its staffs have great devotion to Blessed Virgin Mary and they keep their evangelization work under the protective intercession of the Blessed Virgin Mary.

        The live programs like ‘The Drew Mariani Show’, ‘Father Simon Says’, ‘The Inner life’, ‘Go ask your Father’ and other programs help the people to relate the faith with the everyday life. A few times, I was with the team of ‘The Drew Mariani Show’. The host and producers try their best to put catholic faith into everyday life. For this, every day, they try to find topics which are relevant to this particular situation and the problems which affect everyday life.


       The prayer lines of Relevant Radio help the listeners to request to their prayer needs. Staffs, who attend the phone calls, relate with the callers, give moral support in their sufferings through their consoling words and prayers. Later, the intentions of the callers are prayed at the chapel of the Nativity and Carmelite Monastery. Some of the important intentions are taken at 3 p.m. at the chaplet of Divine Mercy on week days.

        Facebook live program is one of the important social media program. It helps to broadcast the Holy Mass lively. It helps thousands of views to see Holy Mass lively every day and thousands of others see it as recorded mass. During the Holy Mass live, hundreds of prayer requests are raised by the viewers to pray for different needs.

Relevant web-site helps thousands of internet views to listen to programs all over the world. It has live Radio, recorded programs and many other religious articles and prayers.

         Mobile App is a new innovation in the social media world and it attracts many youth to practice the Catholic faith. This mobile App helps the readers and listeners to read and to listen to everyday prayers and most of the important Catholic prayers. One can also listen to the Relevant Radio lively and one can search and find previously recorded programs. 

        Fr Rochy, the Executive Director, Relevant Radio Senior Management, Board of Directors and Episcopal Advisory Council work hand in hand in this new Evangelizative progress. Throughout these years, their hard work is seen by increasing number of stations, increasing numbers of live programs and merging Relevant Radio with Immaculate Heart Radio, while Relevant Radio continued as  the one-air branding. 

Hands up to Fr Rochy and its members.

          

Thursday, 28 September 2017

ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி: திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கானின் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளாலும் சுற்றுலாப் பயணிகளாலும் நிரம்பி வழிந்தது. கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக இருப்பவைகள் குறித்து கவனமாகச் செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தார். 


மறைக்கல்வியுரை : ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி

விடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

செப்.,28,2017. ஏமன் நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு 18 மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட சலேசிய துறவுசபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் இவ்வியாழனன்று இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்.


சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

Wednesday, 27 September 2017

முகநூலின் ஆசிரியரைப்பற்றி...


முகநூலின் ஆசிரியரைப்பற்றி...

இந்த முகநூலின் ஆசிரியர் அருட்பணி. ஞானதாஸ், கோட்டாறு மறைமாவட்டம் சரல் பங்கைச் சார்ந்தவர். தனது உயர்நிலைப்பள்ளி படிப்பை தூய ஜோசப் உயர்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைப்படிப்பை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்து, கல்லூரி படிப்பை பயோனியர் குமாரசாமி கல்லூரியிலும் முடித்தவர். 

குருத்துவ, தத்துவ இயல் மற்றும் இறையியல் படிப்பை மங்களூர், தூய ஜோசப் குருத்துவக்கல்லூரில் முடித்து 19-4-2019 அன்று கோட்டாறு கேட்ட வரம் தரும், தூய சவேரியார் பேராலயத்தில் வைத்து ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அருட்பணியாளராக அருள்பொழிவுப் பெற்றவர். 

கடியப்பட்டணம் மற்றும் கார்மல்நகர் பங்குகளில் இணைப்பங்குப்பணியாளராக பணியாற்றியப்பின் கப்பியறைப்பங்கு பங்குத்தந்தையாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். கப்பியறைப்பங்கு பணியாளராக பணியாற்றிய காலத்தில். நாஞ்சில் பால் நிறுவனத்தின் பொருளராகவும், முளகுமூடு மறைவட்ட மறைக்கல்வி இயக்குநராகவும், முளகுமூடு மண்டல அன்பிய இயக்குநராகவும் பணியாற்றியவர். 

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், உயர்படிப்பிற்காக ரோமைக்கு அனுப்பப்பட்டு, ரோமையிலுள்ள திருத்தந்தையின், தூய சிலுவை பல்கலைக்கழகத்தில் 'திருச்சபையில் ஊடகங்கள் (தொலைத்தொடர்பு சாதனங்கள்)' என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, தற்போது ஆஞ்சலிகும் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை தொடர்கிறார்.



Tuesday, 26 September 2017

Gospel today 27-09-2017 in Tamil

இன்றைய இறைவார்த்தை
நற்செய்தி வாசகம்  27-09-2017

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


இன்றையா நற்செய்தி: 26-9-2017

இன்றையா நற்செய்தி: 26-9-2017
லூக்கா 8:19-21 இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.