நமது சமூகம் தீயாகத்தால் வளர்கிறது. Stress ஒரு வணிகம்.
நமது சமூகம் தீயாகத்தால்
வளர்கிறது. Stress
ஒரு வணிகம்.
- Ø வாழ்வில் மன ஆழுத்தம் என்பது ஒரு வணிகம். பெற்றோருக்கில்லாத மன அழுத்தமா படிக்கும் மாணவர்களுக்கு வருகிறது.
- Ø மேலைநாட்டில் முதியவர்கள் தனிமையில் வாழும்போது, கால சூழ்நிலைக்கு ஏற்ப மரத்தின் இலைகள் உதிரும், குருவிகள் கூடுகளை விட்டு வெளியேறும். இதனை ஒருசில நாள்கள் மகிழ்ச்சியாக அனுபவித்த முதியவர்கள், இவைகளை காணமல் போவதை இயற்கை என்பதை மறந்து, மன கவலையாக இருக்கும் போது மன அழுத்தம் என்று மருந்துக்கொடுப்பது மருத்துவ உலகம்.
- Ø மன அழுத்தத்தை குறைக்க அம்மாவோடு சமையலைக்கு செல்வோம். அவர்களுக்கு உதவுவோம்.
- Ø உறவினர்களோடு பேசுவோம்.
- Ø நேர்மறையான எண்ணங்களை வாழ்வில் ஏற்போம். தனியாக இருப்பதைவிட, இணைந்து பேசி, சிரிப்போம். மனதளவில் நல்லதை நினைத்து, மகிழ்ச்சியாக இருப்போம்.
- Ø நேர்மறையான நண்பர்களை தேர்ந்தெடுப்போம்.
- Ø எதிர்மறையான சிந்தனையிலிருந்து/ மனிதர்களிலிருந்து வெளியே வாருவோம்.
- Ø நமது சமூகத்தில், பிள்ளைகள் மற்றும் இளையோர்கள் உயர வேண்டும் என நினைக்கும் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார். அவர்கள் வங்கியில் இருக்கலாம். வேலை வழங்கும் நிறுவனங்களில் இருக்கலாம்.
- Ø மன அழுத்தம் வருகிறப்போது, இளையோரை அம்மாவிடம் பேசுங்கள்.
- Ø இந்த உலகம், தமிழ் சமூகம் தியாகத்தால் வளர்ந்துள்ளது. மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலைச்செய்துக் கொண்டே படிக்கிறார்கள். ஆனால் தமிழ் சமூக மாணவர்கள் பெற்றோர்களின் தியாகத்தால் படிக்கிறார்கள்.
- Ø இன்றும் நமது அம்மாக்கள் கடைசியாக உண்கிறார்கள். ஒருவேளை மற்றவர்களுக்கு உணவு கிடைக்காதோ என்று காத்திருந்து, கடைசியாக மீதியான உணவை உண்கிறார்கள்.
- Ø தந்தையார்கள் தங்களது கடின உழைப்பில் TVS 50 வாங்குவதற்கு முன்னால், பிள்ளைகளுக்கு நல்ல மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டு நடையிலுள்ள செருப்பை வைத்தே, எது தந்தையின் செருப்பு, எது பிள்ளையின் செருப்பு என்று அறிந்துக்கொள்ளலாம். இத்தகைய தீயாகத்தால் வளர்ந்தது நமது படிப்பு.
- Ø சமூகம் உங்களுக்காக உழைக்கிறது. இன்றைய இளையோர் எதிர்கால தலைமுறையினருக்கு திரும்ப கொடுப்பார்கள் என இன்றைய சமூகம் நம்புகிறது.
- Ø என்னால் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற நேர்மறையான எண்ணத்தை நம்மில் விதைப்போம். பொறுப்பை வாழ்வில் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிப்போம். இளையோர் நாட்டின் தூண்கள்.
- Ø மகிழ்ச்சியாக, சந்தோசமாக இந்த உலகைப்பார்ப்போம். காலம் நமக்கானது.
- Ø வெற்றிப்பெற போகிறோம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்.
No comments:
Post a Comment