Monday, 3 June 2019

நமது சமூகம் தீயாகத்தால் வளர்கிறது. Stress ஒரு வணிகம்.


நமது சமூகம் தீயாகத்தால் வளர்கிறது. Stress ஒரு வணிகம்.


  • Ø  வாழ்வில் மன ஆழுத்தம் என்பது ஒரு வணிகம். பெற்றோருக்கில்லாத மன அழுத்தமா படிக்கும் மாணவர்களுக்கு வருகிறது.
  • Ø  மேலைநாட்டில் முதியவர்கள் தனிமையில் வாழும்போது, கால சூழ்நிலைக்கு ஏற்ப மரத்தின் இலைகள் உதிரும், குருவிகள் கூடுகளை விட்டு வெளியேறும். இதனை ஒருசில நாள்கள் மகிழ்ச்சியாக அனுபவித்த முதியவர்கள், இவைகளை காணமல் போவதை இயற்கை என்பதை மறந்து, மன கவலையாக இருக்கும் போது மன அழுத்தம் என்று மருந்துக்கொடுப்பது மருத்துவ உலகம்.
  • Ø  மன அழுத்தத்தை குறைக்க அம்மாவோடு சமையலைக்கு செல்வோம். அவர்களுக்கு உதவுவோம்.
  • Ø  உறவினர்களோடு பேசுவோம்.
  • Ø  நேர்மறையான எண்ணங்களை வாழ்வில் ஏற்போம். தனியாக இருப்பதைவிட, இணைந்து பேசி, சிரிப்போம். மனதளவில் நல்லதை நினைத்து, மகிழ்ச்சியாக இருப்போம்.
  • Ø  நேர்மறையான நண்பர்களை தேர்ந்தெடுப்போம்.
  • Ø  எதிர்மறையான சிந்தனையிலிருந்து/ மனிதர்களிலிருந்து வெளியே வாருவோம்.
  • Ø  நமது சமூகத்தில், பிள்ளைகள் மற்றும் இளையோர்கள் உயர வேண்டும் என நினைக்கும் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார். அவர்கள் வங்கியில் இருக்கலாம். வேலை வழங்கும் நிறுவனங்களில் இருக்கலாம்.
  • Ø  மன அழுத்தம் வருகிறப்போது, இளையோரை அம்மாவிடம் பேசுங்கள்.
  • Ø  இந்த உலகம், தமிழ் சமூகம் தியாகத்தால் வளர்ந்துள்ளது. மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலைச்செய்துக் கொண்டே படிக்கிறார்கள். ஆனால் தமிழ் சமூக மாணவர்கள் பெற்றோர்களின் தியாகத்தால் படிக்கிறார்கள்.
  • Ø  இன்றும் நமது அம்மாக்கள் கடைசியாக உண்கிறார்கள். ஒருவேளை மற்றவர்களுக்கு உணவு கிடைக்காதோ என்று காத்திருந்து, கடைசியாக மீதியான உணவை உண்கிறார்கள்.
  • Ø  தந்தையார்கள் தங்களது கடின உழைப்பில் TVS 50 வாங்குவதற்கு முன்னால், பிள்ளைகளுக்கு நல்ல மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டு நடையிலுள்ள செருப்பை வைத்தே, எது தந்தையின் செருப்பு, எது பிள்ளையின் செருப்பு என்று அறிந்துக்கொள்ளலாம். இத்தகைய தீயாகத்தால் வளர்ந்தது நமது படிப்பு.
  • Ø  சமூகம் உங்களுக்காக உழைக்கிறது. இன்றைய இளையோர் எதிர்கால தலைமுறையினருக்கு திரும்ப கொடுப்பார்கள் என இன்றைய சமூகம் நம்புகிறது.
  • Ø  என்னால் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற நேர்மறையான எண்ணத்தை நம்மில் விதைப்போம். பொறுப்பை வாழ்வில் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிப்போம். இளையோர் நாட்டின் தூண்கள்.
  • Ø  மகிழ்ச்சியாக, சந்தோசமாக இந்த உலகைப்பார்ப்போம். காலம் நமக்கானது.
  • Ø  வெற்றிப்பெற போகிறோம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்.

நமது சமூகம் தீயாகத்தால் வளர்கிறது.....


Sunday, 16 December 2018

இந்த கிறிஸ்துமஸ் இனிய கிறிஸ்துமஸாக மாற வாழ்த்துகள்.


மார்கழி இரவின் குளிரினிலே

மாட்டுத்தொழுவின் மஞ்சத்திலே

சின்ன இயேசு பாலகன்

சிங்காரமாய் வந்து பிறந்திட்டாரே!


மாபரன் மனிதனாய் வந்ததாலே

பூவுலகில்  புன்னகைப் பூத்ததலே!

ஏழைகளின் ஏந்தல் உதித்ததாலே

வறியோரும் வளமாய் வாழ்ந்தனரே!


நீதியின் அரசர் உதயமானதாலே 

மண்ணில் புதுவிடியல் வந்ததே!

விண்ணவரும் மண்ணவரும் மகிழ்ந்ததாலே

நாமும் மகிழ்வோம்மகிழ்விப்போமே!


கடவுள் மனிதனான, 'கிறிஸ்து பிறப்பு' விழாவைக் கொண்டாடும் இந்நாள்களில் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் நம்மை தேடிவந்து, அன்னைமரியாளின் வயிற்றில் கருவுற்று, பெத்லேகம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் இடையருக்கும், ஞானிகளுக்கும் தன்னை வெளிப்படுத்தி, மனிதர்களின் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கேற்று, நம்மைப்போல வாழ்ந்து, மனிதனும் புனிதமடைய மீட்பின் வழியை நமக்கு காட்டினார்.
இந்த இயேசுவின் பிறப்பை ஆண்டுத்தோறும்க் கொண்டாடும்போது, இயேசுவின் வருகையை என்சோ பியாங்கி என்கிற இத்தாலிய சன்னியாசி மூன்று நிலைகளில் விளக்குகிறார்.
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக்காண வந்த இறைமகன்  இயேசுவை, விண்மீன் ஏழக்கண்டு ஞானிகள் வணங்கினாலும், வானதூதரின் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியைக் கேட்ட இடையர்கள் தீவனத்தொட்டியில் இருந்த குழந்தை இயேசுவை ஆராதித்தாலும், மறைநூலையறிந்த மறைவல்லுநர்களும், அரச குடிமக்களும் ஏழையின் வடிவில் மாடடைக்குடிலில் பிறந்த, பாலனை இதயத்தில் ஏற்றவில்லை. இயேசுவின் முதல் வருகை, வறியவருக்கே வாழ்வைத்தந்தது.


இயேசுவின் இரண்டாவது வருகை, உலக முடிவின்போது அமையும். இயேசு தீமையை வென்று வெற்றிவீரராய் வருவார். நல்லவர்களையும், தீயவர்களையும் இரண்டாக பிரித்து, நல்லவர்களை தந்தையாம் கடவுள் ஏற்பாடு செய்திருக்கின்ற வானக வீட்டிற்கு அழைத்துச்செல்வார்.
அதுமட்டுமல்ல, நம்மோடு நற்செய்தி வழியாக, நற்கருணை வழியாக வாழும் இயேசுவை இதயத்தில் ஏற்றுவது இயேவின் மூன்றாம் வருகை, நம் இதயத்தில். இயேசுவின் இவ்வருகை,  ஒவ்வொரு நாளும எவனொருவர் இயேசுவை தனது உள்ளத்தில் ஏற்றுக்கொள்கின்றானோ அன்று நடைபெறுகிறது. தூய பவுல் கூறுவதுபோல நமது உடல் கடவுள் வாழும் ஆலயம். விவிலியத்தில் உறையும் இறைவனை, நற்கருணையில் பிரசன்னமாகும் இயேசுவை, நமது உள்ளத்தில் ஏற்பது நம்மை புதுப்படைப்பாக்கும், கிறிஸ்து பிறப்பு விழாவை மெருகூட்டும்.
இந்நாள்களில், இறைவனை நம்முள்ளத்தில் உறைய தேடுவோம். இயேசுவை அயலாரில், முதியவர்களில், நோயாளர்களில், கைவிடப்பட்டவர்களில், ஆறுதலுக்காக ஏங்கும் மனிதர்களில் கண்டு, அந்த இயேசுவை நமது வாழ்வில் பிரதிபலிப்போம்.


இந்த கிறிஸ்துமஸ் இனிய கிறிஸ்துமஸாக மாற வாழ்த்துகள்.